நாகையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது

நாகையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

நாகை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 8 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம்,வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகை வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய சோதனையில் சிந்தாமணி (58) என்பவரது வீட்டில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சத்தியவாணி (30) தங்கபாண்டி (30), கலைமணி (30), செல்லூர் சுனாமி குடியிருப்பு சேர்ந்த சத்யா (30) உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மதுரை, தேனி ஆகிய பகுதிகளிலிருந்து நாகைக்கு கொண்டு வந்து அதை சிறிய பொட்டலமாக போட்டு நாகை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வது தெரிய வந்தது.இதைப்போல்

வேளாங்கண்ணியில் இருந்து காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்பெர்னாண்டஸ்(21), பூக்கார தெருவைச்சேர்ந்த யேசுராஜ்(36), முஸ்லீம் தெருவைச் சேர்ந்த கஸ்பர்(28) என்பது தெரியவந்தது-. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil