நடந்தே சென்று வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நடந்தே சென்று வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வடிவேல் ராவணன் மீனவ பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு 3 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் போட்டியிடும் வடிவேல் ராவணன் , கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் இருந்து, அக்கரைப்பேட்டை, கல்லார் பகுதிகளில் மீனவ பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர், பரவை,வீரன் குடிகாடு, காரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று தேர்தல் அறிக்கைகளை கூறியவாறு மாம்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!