நாகை அருகே திருப்பூண்டியில் பா.ஜ.க. நிர்வாகி காருக்கு தீ வைப்பு
தீ வைக்கப்பட்ட கார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராம். இவர் வீட்டுக்கு முன்பு தகர சீட் போட்ட செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புது ஓம்னி காரில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் காரின் இடது பக்க கதவு இடது பக்க டயர் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சக்திகுமார் தந்தை குஞ்சையன் தகவல் தெரிவித்ததன் பேரில் வீட்டில் இருந்த புவனேஸ்வர்ராம் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தண்ணீர் ஊற்றி கார் முழுவதும் எரிவதற்கு முன் அணைத்தனர்.
இதுகுறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பா.ஜ.க. நிர்வாகியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu