வேளாங்கண்ணி ஆலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி ஆலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி
X

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பாதம் கழுவும் நிகழ்வு நடைபெறவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி தவக்காலம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஜபம், மன்றாட்டு ,திருப்பலி, போன்றவை நடைபெற்றது. 28-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இயேசு அன்றைய தினம் தம்முடைய சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு அவர்களுடன் ராஜபோஜன பந்தி இருந்தார். இதுவே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதை நினைவு கூறும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது . எப்பொழுதும் பங்குத்தந்தைகள் அமர்ந்திருக்கும் சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை .அதனை தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது.பின்னர் மேல்கோவிலில் ஆராதனை நடைபெற்றது.

Tags

Next Story
how to bring ai in agriculture