வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றம், பக்தர்கள் அனுமதி ரத்து
வேளாங்கண்ணி பேராலயம் ( பைல் படம்)
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழா
வருடா வருடம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியில் இயங்கிவரும் தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பத்து நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று முதல் வேளாங்கண்ணியில் செயல்பட்டு வரும் 600க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளது.
பூக்காரத் தெரு செருதூர் வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 19இடங்களில் தடுப்புகள் அமைத்து வெளியூர் பக்தர்கள் செல்லத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu