/* */

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

HIGHLIGHTS

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
X

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். 

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில், நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் கூறி, காளியம்மனையும், ஐயப்ப சுவாமியையும் வேண்டிக் கொண்டனர்.

பின்னர உலக மக்கள் நன்மைக்காகவும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் ஒரே நேரத்தில் அனைத்து பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சுவாமிக்கு தீபாராதனை செய்து வேண்டிக்கொண்டனர். சகல சௌபாக்கியம் வேண்டி, கோவில் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி சுவாமிக்கு வழிபாடு செய்தது, அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

Updated On: 29 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு