நாகையில் சாராய வியாபாரி 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

நாகப்பட்டினத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உத்தரவு.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குற்றம் புரிந்தான் இருப்பு பகுதியை சேர்ந்த அய்யர் தனபால், ராதாமங்கலம் எரும்புகன்னி கிராமத்தை சேர்ந்த மொட்டை முருகன் என்கிற முருகையன்,

கோவில் கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் ஆகியோர் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது. மேலும் இவர்கள் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story