கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 34). நாகை வெளிப்பாளையம், வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 38).

இவர்கள் இருவரும் கீழ்வேளூர் அருகே தேவூர், தெற்காலத்தூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் மீது சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சத்யா, முத்துலட்சுமி மீது சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் , துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்,ஆகியோர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர்.

இதன் பேரில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் திருவாரூர் சிறையில் இருந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!