இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் நாகை வந்தடைந்தனர்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட  18 மீனவர்கள் நாகை வந்தடைந்தனர்
X

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சொந்த ஊருக்கு பஸ்சில் வந்து இறங்கினர்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேர் இன்று சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை அரசால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 18 மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து 18 மீனவர்களும் இன்று சொந்த கிராமத்திற்கு வந்தடைந்தனர். நாகை மீன்பிடி துறைமுகம் வந்த மீனவர்களை கிராம நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கண்ணிர்மல்க வரவேற்றனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தனர்.

விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ள மீனவர்கள், இலங்கை வசம் சிக்கியுள்ள இரண்டு படகுகளையும் விரைந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story