சொத்து தகராறு -அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி.

சொத்து தகராறு -அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி.
X

நாகை அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகடம்பரனூர் பகுதியில் வசிப்பவர் நவநீதகிருஷ்ணன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர் வீட்டுக்கு எதிரில் இவரது தம்பி வல்லதரசு வசித்து வருகிறார்.இவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். வல்லதரசு, அண்ணன் வீட்டிற்கு சென்று சொத்து விசயமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் வல்லதரசு, அரிவாளால் உடலில் பல இடங்களில் சராமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இருவருக்கும் சொத்து தகராறில் ஆத்திரமடைந்து அண்ணனை தம்பி வல்லதரசு கொலை செய்ததாக கூறப்படுகிறது. கீழ்வேளுர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவநீதகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் கொலை தொடர்பாக வல்லதரசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story