விடுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

விடுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
X

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 27ம் தேதி வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெற்கு தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவருடன் கோவை மாவட்டம் குப்பிபாளையம் செம்மண் கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராணி, மற்றும் 30 வயது மதிக்கதக்க பெயர் தெரியாத ஆண் , 10 வயது ஆண் குழந்தை, ஏழு வயது பெண் குழந்தை ஆகியோரும் ஒரு நாள் அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில் ஒரு நாள் முடிந்தும் அந்த நபர்கள் அறையை காலி செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அறையின் வெளி பகுதி தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ராணி இறந்து கிடந்தார். மற்ற நான்கு பேரையும் காணவில்லை. இது குறித்து வேளாங்கண்ணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அறையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராணி மூக்கில் ரத்தம் மற்றும் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விடுதியில் போலீசார் விசாரணை செய்து ராணி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்