நாகை அருகே இளைஞர் வெட்டி படுகொலை

நாகை அருகே இளைஞர் வெட்டி படுகொலை
X

நாகை அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (33 )இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவர் ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் திருப்பூண்டியில் ஹோட்டல் நடத்த போவதாக தனது தந்தை சுப்பிரமணியத்திடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகையை கொடுத்து உள்ளார். அதை நாகையில் அடகு வைத்து விட்டு மோட்டார் பைக்கில் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது விழுந்தமாவடி கன்னிதோப்பு அய்யனார் கோயில் அருகே வரும் போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் இளையராஜா அதே இடத்தில் இறந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story