நாகை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு

நாகை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு
X

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் ஆத்மநாதன்

இரு கிராம மீனவர்களிடையே மோதல் சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை கரையோர கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களான எஸ்.ஆத்மநாதன், எஸ்.சிவநேச செல்வம், எஸ்.காளத்திநாதன் ஆகிய மூவரும் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​இயந்திர படகில் வந்த கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இரு மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது நடந்து கொண்டிருந்தபோது, ​​இயந்திரப் படகில் இருந்த மீனவர் தனது படகை பைபர் படகில் மோதியதாகக் கூறப்படுகிறது. சிறிய படகு கவிழ்ந்ததால், அதில் இருந்த மூன்று மீனவர்களும் கடலுக்குள் சென்றனர். அப்போது, ​​இயந்திர படகு மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மூவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. சிவநேச செல்வம் மற்றும் காளத்திநாதனுக்கு பலத்த அடி, இடது கை மற்றும் முகத்தில் காயம் அடைந்த ஆத்மநாதன் தப்பியோடி, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்பியார் நகர் மீனவர்கள் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் கடலுக்குள் மூழ்கிய காலஸ்திநாதன் என்பவர் மாயமானார். மேலும் இடது கையில் முறிவு ஏற்பட்டு ஆத்மநாபன் என்பவர் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் பைபர் படகு சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசைப்படகில் இருந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!