நாகூர் தர்காவில் பா.ஜ.க. நிர்வாகியின் அண்ணன் இறைவனிடம் கையேந்தி அசத்தல்

நாகூர் தர்காவில் பா.ஜ.க. நிர்வாகியின் அண்ணன் இறைவனிடம் கையேந்தி அசத்தல்
X

நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்தார் பாஜக நிர்வாகியின் உடன் பிறந்த சகோதரர்.

நாகூர் தர்காவில் பா.ஜ.க. நிர்வாகியின் அண்ணன் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலை பாடி அசத்தி உள்ளார்.

முன்னாள் பா.ஜ.க. நாகை மாவட்ட தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருபவர் நாகை மாவட்டம் பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்த நேதாஜி. இவருடைய உடன் பிறந்த அண்ணன் செல்வம் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், செல்வம் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற இஸ்லாமிய பாடலை பாடி அசத்தி உள்ளார். உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கரோக்கி இசைக்கு தகுந்தாற்போல பாடலை பாடியுள்ள அவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
ai automation in agriculture