கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை

கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை
X

நாகப்பட்டினத்தில் பெண் ஒருவர், கோவிலில் வைத்து கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். கட்டிட கூலி வேலைக்கு அந்த பெண் சென்று வந்துள்ளார். தனியாக வசித்து வந்த இவர் இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவு சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சில இளைஞர்கள் அந்த பெண்ணை வாயை பொத்தி அருகே இருந்த கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் உடல் நலம் பாதித்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காமராஜ் நகரில் உள்ள அந்த பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் இதுபற்றி புகார் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story