மயிலாடுதுறை மாவட்ட முதல் ஆட்சியர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக லலிதா கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினத்தில் இருந்து பிரித்து இன்று துவக்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்களும் 27 வருவாய் கிராமங்கள் உள்ளன. புதிய மாவட்டத்தில் முதல் ஆட்சித் தலைவராக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்த லலிதா இன்று காலை முறைப்படி கோப்பில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி , இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் அதிகாரிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!