தமிழகம் முழுவதும் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று முதல் ரமலான் நோன்பைத் தொடங்கினர்.தமிழகத்தில் பிறை காட்சியளித்தது.
2022 ரமலான் பண்டிகை பற்றிய சில முக்கியமான விஷயங்கள்!
இஸ்லாமிய சமயத்தின் மிக முக்கியமான பண்டிகை ரமலான் பண்டிகை ஆகும். இந்த ஆண்டு ரமலான் பண்டிகையானது வெகு விரைவில் வரவிருக்கிறது. ரமலான் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாட, இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஏற்கனவே தயாராகி வருகின்றனா். ஏறக்குறைய ஒரு மாதம் அளவிற்கு ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் ரோசா (Roza) என்ற நோன்பை மேற்கொள்கின்றனா். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி அது மறையும் வரை பகல் நேரத்தில் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தாமல் கடும் நோன்பை மேற்கொள்வா். இந்த நோன்பானது ரமலான் பண்டிகையின் மையமாக இருக்கிறது.
ரமலான் மாதமானது இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாக வருகிறது. இந்த மாதத்தை, முகமது நபி அவா்களின் போதனைகளை மறுவாசிப்பு செய்வதற்கான வாய்ப்பாக இஸ்லாமிய மக்கள் பார்க்கின்றனா். ரமலான் நோன்பு என்ற சடங்கானது, ஏழை மக்களோடு தம்மை இணைத்துக் கொண்டு, அவா்கள் மீது பரிவு கொள்ள உதவி செய்கிறது என்றும், அல்லாஹ் அவா்களின் ஆசீா்வாதங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை மீட்டு எடுப்பதற்கு உதவி செய்கிறது என்றும் இஸ்லாமிய மக்கள் கருதுகின்றனா்.
இந்த ஆண்டு ரமலான் நோன்பானது இன்று ஏப்ரல் மாதம் 3ம் தேதி அன்று தொடங்கி மே மாதம் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மறுநாள் ஈத்-அல்-ஃபிட்ர் (Eid-al-Fitr) கொண்டாட்டங்கள் இருக்கும். ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நீளமான நோன்பு முடிவடைவதை ஈத் கொண்டாட்டம் குறிக்கிறது. ஈத் அன்று மக்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று முழுவதும் இஸ்லாமிய மக்கள் அருமையான விருந்து சமைத்து, தங்கள் உற்றார் உறவினரோடு பகிர்ந்து உண்டு மகிழ்வா்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று பழைய இஸ்லாமிய புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இந்த மாதத்தில் இஸ்லாமியா்கள் அல்லாஹ் அவா்களிடம் பக்தி கொண்டு, நோன்பையும், தொழுகைகளையும் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu