மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசிய கொடியால் பரபரப்பு

மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசிய கொடியால் பரபரப்பு
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி தலைகீழாக பறந்த காட்சி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசியகொடியால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு விதியின்படி முக்கியமான அரசு அலுவலகங்களில் தினமும் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கொடியை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணம் தேசியக்கொடி தலைகீழாக பறந்து கொண்டிருந்தது தான்.

இது குறித்து ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணப்பாறை நகராட்சி அலுவலகமே பரபரப்புக்குள்ளானது. ஓடி வந்த ஊழியர்கள் தேசிய கொடியை அவசர அவசரமாக கீழே இறக்கினர். பின்னர் உரிய மரியாதை செலுத்தப்பட்டு தேசிய கொடி சரி செய்யப்பட்டு மீண்டும் கம்பத்தில் ஏற்றப்பட்டது.

தேசிய கொடி தலைகீழாக பறக்க விடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைகீழாக தேசியக்கொடி ஏற்றப்பட்டதற்கு யார்? காரணம் என கேட்டால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!