நகராட்சி ஆணையாளர்கள் பணியிடமாற்றம்

நகராட்சி ஆணையாளர்கள் பணியிடமாற்றம்
X
23 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா வெளியிட்டுள்ள உத்தரவில், நிர்வாக காரணங்களுக்காக கீழ்க்கண்ட நகராட்சி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்

புவனேஸ்வரன் என்ற அண்ணாமலை, வாணியம்பாடியிலிருந்து மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் இன்று திருப்பத்தூர் கலெக்டரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏகராஜ் நாகப்பட்டினத்திலிருந்து திருப்பத்தூருக்கும்

கமலா மன்னார்குடியிலிருந்து பழனிக்கும்

சௌந்தர்ராஜன் ஆம்பூரிலிருந்து திண்டிவனத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கே. சுப்பையா மயிலாடுதுறையிலிருந்து தேனி அல்லிநகரத்திற்கும்,

பி.வி. சுரேந்திரஷா மேட்டூரிலிருந்து விழுப்புரத்திற்கும்,

அஜிதா பர்வீன் சிதம்பரத்திலிருந்து ஆம்புருக்கும்,

பி. சத்தியநாதன் திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடிக்கும்,

என். ஸ்ரீதேவி ஆத்தூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கும்

கே. ஜெயராமராஜா திருச்செங்கோட்டில் இருந்து இராணிப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டி. கிருஷ்ணமூர்த்தி உடுமலைபேட்டையிலிருந்து குன்னூருக்கும்,

நாகராஜன் தேனி அல்லிநகரத்திலிருந்து புதுக்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்


விருத்தாசலம் ஆணையர் ஜி. அசோக் குமார் அருப்புக்கோட்டைக்கும்,

திருமங்கலம் ஆணையர் ஜெ. விநாயகம் பல்லடத்துக்கும்,

ஆற்காடு ஆணையர் அருள்செல்வன் விருத்தாசலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


அதே போல் இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

குளித்தலை ஆணையர் முத்துக்குமார் காங்கேயத்துக்கும்,

ராமேஸ்வரம் ஆணையர் ராமர் செம்பாக்கத்திற்கும்,

சாத்தூர் ஆணையர் ராஜமாணிக்கம் குழித்துறைக்கும்

உதகமண்டலம் ஆணையர் இளவரசன் சாத்தூருக்கும்

திருத்தணி ஆணையர் பாலசுப்ரமணியன் திருவந்திபுரத்திற்கும்,

திருவந்திபுரம் ஆணையர் ப்ரீத்தி திருத்தணிக்கும்,

காங்கேயம் ஆணையர் மூர்த்தி குளித்தலைக்கும்

செம்பாக்கம் ஆணையர் பெர்பெடி டெரென்ஸ் லியோன் பத்மநாபாபுரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!