சென்னையில் கிராமிய கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்திய கனிமொழி எம்.பி.
சென்னையில் நம்ம ஊரு திருவிழா தொடர்பாக கனிமொழி எம்.பி. கிராமப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடினார்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி தொடர்பாக கிராமியக் கலைஞர்களுடன் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உரையாடினார்.
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, கடந்த 2007ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த நிலையில், கடந்த 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2022-ல் இருந்து சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (09/01/2024) சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகை செய்ய துவங்கியுள்ளனர். ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி உரையாடினார்.
சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழ்நாடு முதல்வரால் சென்னை தீவுத்திடல் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளாவார்கள்.
தீவுத்திடல், மாநகராட்சி விளையாட்டு மைதானம்,கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா (தெற்கு),பெரம்பூர், ராபின்சன் விளையாட்டு மைதானம்,இராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா,மைலாப்பூர், செம்மொழிப் பூங்கா, மாநகராட்சி விளையாட்டு திடல்,நுங்கம்பாக்கம், பாரத சாரண சாரணியர் திடல்,திருவல்லிக்கேணி, மாநகராட்சி மைதானம்,நடேசன் பூங்கா எதிரில், தி.நகர், எலியட்ஸ் கடற்கரை,பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம்,சைதாப்பேட்டை, சிவன் பூங்கா,கே.கே.நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம்,பழனியப்பா நகர்,வளசரவாக்கம், கோபுரப்பூங்கா,அண்ணா நகர், ஜெய்நகர் பூங்கா,கோயம்பேடு, எஸ்.வி. விளையாட்டு மைதானம்,அம்பத்தூர், அரசு அருங்காட்சியகம்,எழும்பூர் ஆகிய இடங்களில் இந்த திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu