ஹோட்டல் சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு

ஹோட்டல் சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு
X

கற்பகவல்லி(34)

சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு குளிபானம் குடித்த போது, வாந்தி எடுத்து மயக்கம். மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


தர்ஷினி (7)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கற்பகவல்லி தனது மகளுடன் சென்று அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது லேசான வயிர் எரிச்சல் இருந்த காரணத்தினால் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி கற்பகவல்லி மற்றும் அவரது மகள் தர்ஷினி இருவரும் அருந்தியுள்ளனர்.

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்குள்ளாக சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இந்த

சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தினையும், பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், கோவில்பட்டி தாலூகா உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸ் ஆகியோர் அவர்கள் உணவு வாங்கிய ஹோட்டல், குளிர்பானம் வாங்கிய கடையில் ஆய்வு செய்தனர். மேலும் உணவு மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிக்கன் மற்றும் குளிர்பானம் அருந்தி தாய், மகள் உயிரிழந்தனர் என்ற புகாரை தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும், இதில் உணவின் குறைவுபாடு நேரிடை காரணமாக அறியப்படவில்லை. இருப்பினும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அருந்திய உணவு அல்லது குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், சிக்கன் சாப்பிட்டு விட்டு குளிர்பானம் அருந்துவதால் இறப்பு ஏற்படும் என்று கூற முடியாது என்றும், சுகாதாரமான, சமச்சீரான உணவு வகைகளை பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!