அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர மீளாவுக் கூட்டம்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர மீளாவுக் கூட்டத்தில் உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர மீளாவுக் கூட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்து உரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், மாநில திட்ட இயக்குநர் கஜலட்சுமி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்உரையாற்றும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறைக்கு அதிய முக்கியதுவம் அளித்து போதிய நிதி ஒதுக்கிடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். பொதுத்தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு 18 மாவட்டங்களின் தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்களை அன்பாகவும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பொது தேர்வுகள் முடிவுகள் வரும் போது தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களின் முழுமையான செயல்பாடுகள் தெரிய வரும். மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஊக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். மழைக்கால் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பழைய கட்டிடங்களை முழுமையாக அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட கருத்துரு தயார் செய்து போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் காலை உணவு திட்ட செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உரையாற்றினார்.
தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் கீழ்கண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் மேலும் பள்ளி உட்டகட்டமைப்பு மேம்படுத்த, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்களிடம் ரூ. 50 இலட்சத்திற்கான காசோலை, பெரம்பலுர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அவர்களிடம் ரூ.30 இலட்சத்திற்கான காசோலை, கன்னியாக்குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் அவர்களிடம் ரூ. 20 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
அதேப்போல சிறப்பாக செயல்பட்டு வரும் கீழ்கண்ட இடைநிலை தொடக்க கல்வி அலுவலர்களிடம் மேலும் பள்ளி உட்டகட்டமைப்பு மேம்படுத்த, மார்த்தாண்டம் தொடக்கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்களிடம் ரூ. 30 இலட்சத்திற்கான காசோலையும், கோவில்பட்டி தொடக்க கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் அவர்களிடம் ரூ. 20 இலட்சத்திற்கான காசோலையும், நாகர்கோவில் தொடக்கல்வி அலுவலர் ஆர்.மோகன் அவர்களிடம் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை பள்ளிகல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி, தனியார் பள்ளி இயக்குநர் நாகராஜ முருகன், தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், முறைசாரா கல்வி இயக்குநர் முத்துபழனிசாமி, மாவட்ட திட்ட இணை இயக்குநர் வை.குமார். மற்றும் இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்கல்வி அலுவலர்கள், தளி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.சீனிவாச ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu