நெல் ஈரப்பதம் இருந்தாலும் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி

நெல் ஈரப்பதம்  இருந்தாலும் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி
X

அமைச்சர் சக்ரபாணி

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 19 சதவீதம் ஈரப்பதம் இருக்கும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில், பிரவரி முதல் வாரத்தில் பருவம் தவறி பெய்த திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது.

மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து இருந்த நெல்களும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், கொள்முதல் நெல் ஈரப்பதத்தினை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதை நேரடியாக ஆய்வு செய்ய, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முதல்சேத்தி கிராமத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில், மழைநீரில் சாய்ந்த நெற்பயிர்கள் பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்டா மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்த காரணத்தினால் நெல் சாகுபடி, உளுந்து, கடலை பருப்பு, எள் போன்ற பயிர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் ஒரு லட்சத்து 48 ஹெக்டர் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 54 ஆயிரம் ஹெக்டர் அறுவடை செய்யப்பட்டது. பாதிப்பு 23 ஆயிரத்து 205 ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளது.

உளுந்தைப் பொறுத்தவரையில் 26 ஆயிரம் எக்டேர் பயிரிடப்பட்டு இதில் 20 ஆயிரம் 80 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. கடலை 1300 பயிரிடப்பட்டு 1200 ஹெக்டர், எள் 41 ஹெக்டர், பருத்தி 23 ஹெக்டர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பாதிப்பு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். 17 சதவீதம் இருந்த ஈரப்பதம் 22 சதவீதமாக கோரிக்கை விடுத்துள்ளனர் தற்போது 19 சதவீதம் இருக்கும் உள்ள நெல்லை கொள்முதல் செய்து வருகிறோம். சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பாதிப்படைந்துள்ளது. அதன் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த பிரதமருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அறுவடைக்கு கூடுதலாக இயந்திரங்கள் வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக புதிய நவீன அரிசி ஆலைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு நெல்லை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் கூடுதலாக திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

Tags

Next Story
the future of ai in healthcare