தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை
X

பைல் படம்.

தமிழகம், மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வடஉள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் . மின்னல் தாக்கத்தின் போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்ட மைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது. நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் .

திறந்த வெளியில் இருக்க நேரிட்டால். இடி மின்னலில் இருந்து பாதுகாத்து கொள்ள குதி கால்களை ஒன்று சேர்த்து . தலை கு னிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும் தரையை ஒட்டி அமர்வதால் . மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும் . தரையில் சமமாக படுக் கக் கூடாது. எனவே. இடி. மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 4, சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), வால்பாறை பிஏபி (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 2, தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பெரியார் (தேனி) தலா 1.

வெப்பநிலை பற்றிய குறிப்பு :

அதிகபட்ச வெப்பநிலை: சேலத்தில் 37.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil