ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது கனிமொழி எம்.பி.,

ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது    கனிமொழி எம்.பி.,
X

2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி பிடிப்பது உறுதி எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி தூத்துக்குடி வந்தார்.தொடர்ந்து விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி பிடிப்பது உறுதி எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது என்பது தெரிகிறது. இந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை,சுய உதவிக் குழுக்கள் கேட்பார் இன்றி இருக்கிறது என்றார்..

விவசாயிகளின் வசித்து வருவது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் இதனால் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் காத்திருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து விலைகளும் உயர்ந்து உள்ளது.இந்நிலையில் பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஸ்டாலின் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!