/* */

அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை

அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அதில் நாசா பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அமைச்சர்  ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை
X

அமைச்சர் நேரு

சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர் பக்கம் நேற்று இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டது.


இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, " எனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குழு எனது ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் பக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன் அது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேருவின் ட்விட்டர் பக்கத்தை மீட்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்திற்கு திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

Updated On: 26 Nov 2022 6:20 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு