டாஸ்மாக்கிற்கு வரும் சிறார்கள்.. தகவல் தந்தால் ஊக்கத்தொகை: அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி.
முதன் முறையாக டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வருவோர் மற்றும் சிறுவர்களை கண்டறிந்து போதை பழக்கத்தில் ஈடுபடாமல் கவுன்சிலிங் தரப்படும் என மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 21 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 55 கோரிக்கைகளில் கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டிலுக்கு இனிமேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என திட்டவட்டமாக கூறியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மதுவாங்க வரும் சிறுவர்கள் குறித்து தகவல் தரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.மதுவை டெட்ரா பேக்கில் விற்பது குறித்து கமிட்டி அமைத்துள்ளதாகவும், அந்த கமிட்டி 4 மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து தரும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
மேலும் முதன் முறையாக டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மதுவாங்க வருவோர் மற்றும் சிறார்களை கண்டறிந்து போதை பழக்கத்தில் ஈடுபடாமல் கவுன்சிலிங் தரப்படும் என மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu