தமிழகத்தில் 3 அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றியமைப்பு: முதல்வர்

தமிழகத்தில் 3  அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றியமைப்பு: முதல்வர்
X
தமிழகத்தில், 3 அமைச்சர்களின் துறை நிர்வாகத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்றியமைத்துள்ளார்.

தமிழகத்தில், மூன்று அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றியமைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொழில் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்து, சர்க்கரை ஆலைகள் துறையானது, வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இதுவரை இருந்து வந்த, விமான நிலைய நிர்வாகம், தற்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர் நலத்துறையில் இருந்து வந்த வெளிநாட்டு மனிதவள கழக நிர்வாகம், இனி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future