/* */

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடல்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

HIGHLIGHTS

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடல்
X

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

டெல்லியில் 26.01.2023 அன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்களுக்கான குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி முகாம் டெல்லியில் 17.01.2023 முதல் 25.01.2023 வரை நடைபெற்றது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். அங்கு பெற்ற அனுபவங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இது போன்ற நிகழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். சுய ஒழுக்கத்துடனும், திறமைகளுடனும் இருப்பதால் மட்டுமே உங்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் திறமைகளை வளர்த்து மேன்மேலும் பல சாதனைகளை படைத்து தமிழ்நாட்டிற்கும்,

இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2023 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!