அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கு: மதுரையில் நாளை ஆஜராக உத்தரவு
முந்தைய அதிமுக அரசில் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய போது மோசடி செய்ததாக பாலாஜி மீது மூன்று வழக்குகளை அமலாக்க பிரிவு பதிவு செய்தது. இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளை ரத்து செய்தது.
அமலாக்கப்பிரிவு எஃப்.ஐ.ஆர் படி, பாலாஜி, போக்குவரத்து அமைச்சராக பணியாற்றும் போது, அரசு வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தகுதியான நபர்களை புறக்கணிக்கும் நோக்கத்தில், விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மதிப்பெண்களை மாற்றியமைப்பதில் குற்றச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
தகுதியற்ற நபர்களுக்கு வேலை வழங்குவதற்காக பதிவேடுகளில் குளறுபடி செய்யப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை கூறியிருந்தது. மார்ச் 2021 ல் சென்னை குற்றப்பிரிவு தாக்கல் செய்த சமீபத்திய குற்றப்பத்திரிகை, ஆட்சேர்ப்பு ஊழல் நடைமுறைகள் உட்பட அமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இதற்கிடையே கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் 2 ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி 'திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் மாட்டு வண்டிகளில் மணலை அள்ளலாம்' என்று கருத்து தெரிவித்ததற்காக அதிமுக கொடுத்த புகாரைத் தொடர்ந்து ரெய்டு நடந்தது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu