தமிழ்நாடு பட்ஜெட்: சட்டசபையில் இன்று தாக்கல்

தமிழ்நாடு பட்ஜெட்: சட்டசபையில்  இன்று தாக்கல்
X

அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் 

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுகிறார்.

இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய முக்கிய அம்சங்கள்:

  • சமூக நீதியை உறுதி செய்வதற்கான தொலைநோக்கு பார்வையை உறுதி செய்யும் வகையில் திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடை போட்டு வருகிறது.நாட்டிற்கு கலங்கரை விளக்கமாக தமிழகம் திகழ்கிறது
  • பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழக அரசு செயல் பட்டு வருகிறது
  • தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அதிகம் திமுக ஆட்சி பதவியேற்ற போது ரூ62,000 கோடி வருவாய் பற்றாக்குறை- தற்போது ரூ30,000 கோடியாக குறைப்பு. தமிழ்நாடு வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும்
  • சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் பெயரில் நினைவு மண்டபம்- பட்ஜெட் உரையில் அதிரடி அறிவிப்பு
  • ரூ. 5 கோடி மானியத்துடன் அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு
  • தமிழ் கணிணி பண்பாட்டு மாநாடு நடைபெறும்
  • தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் சங்கமம் கலை விழா விரிவுபடுத்தப்படும்
  • பகுதிநேர நாட்டுப் புற கலை பயிற்சி அமையங்கள் அமைக்கப்படும்
  • சோழப் பேரரசு பங்களிப்பை போற்றும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
  • ஜிடிபியில் வரி வருவாய் 6.9% ஆக உயர்ந்துள்ளது.
  • இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இலங்கை தமிழருக்கு வீடு கட்ட மேலும் ரூ273 கோடி நிதி உதவி
  • தமிழர் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்ற நோய்கள் தொடக்க நிலையில் கண்டறிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன
  • தொழிற்சாலைகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களை தொற்றிலிருந்து தடுக்க 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • கிண்டியில் அமைக்கப்பட்ட வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டில் திறந்து வைக்கப்படும்
  • வடசென்னை மக்களுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

பள்ளிக் கல்வித்துறை

அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்


வீரதீர செயல்களுக்கான விருது பெரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கான பரிசுத்தொகை நான்கு மடங்கு உயர்த்தப்படும்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் குடும்பத்திற்கு 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 11.82லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது

புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா

வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் நிதி ஆண்டிலும் நடத்தப்படும்

திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மகாத்மா காந்தி மருத்துவமனையில் ரூபாய் 110 கோடி மதிப்பில் சிறப்பு கட்டடங்கள் கட்டப்படும்

Live Updates

  • 20 March 2023 10:16 AM IST

    மொழிப்போர் தியாகிகள் நினைவு மண்டபம்

    சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் பெயரில் நினைவு மண்டபம்- பட்ஜெட் உரையில் அறிவிப்பு

  • 20 March 2023 10:15 AM IST

    வருவாய் பற்றாக்குறை

    தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அதிகம் திமுக ஆட்சி பதவியேற்ற போது ரூ62,000 கோடி வருவாய் பற்றாக்குறை,  தற்போது ரூ30,000 கோடியாக குறைப்பு. தமிழ்நாடு வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும்

  • 20 March 2023 10:14 AM IST

    பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழக அரசு செயல் பட்டு வருகிறது 

  • 20 March 2023 10:07 AM IST

    சமூக நீதியை உறுதி செய்வதற்கான தொலைநோக்கு பார்வையை உறுதி செய்யும் வகையில் திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடை போட்டு வருகிறது. நாட்டிற்கு கலங்கரை விளக்கமாக தமிழகம் திகழ்கிறது - நிதி அமைச்சர்

  • 20 March 2023 10:06 AM IST

    தமிழக பட்ஜெட் 2023

    2023-2024ம் அறிக்கையை வாசிக்க தொடங்கினார், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

    எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்