சாதாரண உடையில் பிளாட்பார கடையில் உணவு சாப்பிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர்

சாதாரண உடையில் பிளாட்பார கடையில்    உணவு சாப்பிட்ட  பள்ளி கல்வித்துறை அமைச்சர்
X

ரோட்டு கடையில் சாப்பிடும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அமைச்சர் சாதாரண உடை அணிந்து வந்ததின் காரணமாக கடை உரிமையாளர்க்கு அமைச்சர் உணவ்ருந்த வந்ததைக்கூட அடையாளம் காண முடியவில்லை.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் குற்றால வந்த அவர் சாலையோரக் கடைகளையும் மக்களின் கூட்டத்தையும் இரவு நேரங்களில் குற்றாலத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தையும் சுற்றி பார்த்தபடி சாலையோரத்தில் இருந்த உணவகத்தில் திடீரென நுழைந்து அங்கு இரவு உணவு சாப்பிட்டார்.

அமைச்சர் சாதாரண உடை அணிந்து வந்ததின் காரணமாக கடை உரிமையாளர்க்கு அமைச்சர் சாப்பிட வந்த்தைக்கூட அடையாளம் காண முடியவில்லை. பின்னர் அவருக்குப் பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு பணி அதிகாரிகள்,போலீசாரைக் கண்டதும் கடை உரிமையாளர்கள் மற்றும் உணவாக உரிமையாளர் தங்கள் கடையில் வந்து உணவு சாப்பிட்டதும் , பொருட்கள் குறித்து விசாரணை செய்ததும் அமைச்சர் என்று தெரிந்து கொண்டு அமைச்சருக்கு வியாபாரிகள்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குற்றாலம் பஜார் பகுதிகளில் சாதாரணமாக வலம் வந்து அனைவரையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!