பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா

பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா
X
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

தமிழகத்தில் கொரோனா மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பொதுவாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் நாசர், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸும் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
the future of ai in healthcare