காலமான பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி: செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்

காலமான பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி: செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்
X

பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய டி.குமார் அகால மரணமடைந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை ,தலைமைச் செயலகத்தில் இன்று (12.04.2022) பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து சிறப்பு நிகழ்வாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

மேலும், தமிழரசு அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி இயக்குபவராக பணியாற்றிய கோ.முரளிகிருஷ்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்கள் தி.அம்பலவாணன், ச.பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!