பெண்களின் மகப்பேறுகால விழிப்புணர்வு குறுந்தகடை வெளியிட்டார் அமைச்சர் கீதாஜீவன்
பெண்களின் மகப்பேறுகால ஊட்டச்சத்து பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடுகளை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.
சென்னை தியாகராயநகரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை குறித்து ஊடக துறையினருக்கு உடன்பட எடுத்துரைக்கும் கருத்தரங்கினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். பெண்களின் மகப்பேறுகால ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடுகளை வெளியிட்டார்.
உடன், தேசிய சுகாதார குழுமம் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமத், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அரசு இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் V.அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் D. ரத்னா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் S. வளர்மதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை (தேசிய ஊட்டச்சத்து இயக்கம்) இணை இயக்குநர் V.R.ஜெயலட்சுமி மற்றும் ஊடகத் துறையினர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu