அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
X

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார்.

அதேபால், கடந்த ஆண்டு மார்ச்29ம் தேதி, அமைச்சர் துரைமுருகன் 2 நாள் பயணமாக துபாய் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இதற்கிடையே அண்மையில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் கடந்த 2 தினங்களுக்கு முன் தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் மீண்டும் துரைமுருகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் துரைமுருகன் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!