மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்க போட்டிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

இன்று (31.3.2022) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் , ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரையில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்க போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு (FIDE) தலைவர் டிவோர்கோவிச்,ஆர்கடி ( Dvorkovich, Arkady) , இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் செல்வி.அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் இரா.ஆனந்தகுமார், இ.ஆ.ப., பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்புத் தலைவரின் உதவியாளர் கிசெலெவ், கான்ஸ்டான்டின் (Kislev, Konstantin), அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர், செயலாளர் பாரத் சிங் சவுகான் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu