தமிழகதிற்கு வரவேண்டிய உணவு மானிய கோரிக்கைகளை வலியுறுத்தினார் அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒன்றிய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்திட்ட அமைச்சர் பியூஸ் கோயலை இன்று உத்யோக்பவானில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத்தொகை மற்றும் உணவுத்துறை குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தினார் .இச்சந்திப்பின்போது தமிழ் நாடு அரசின் புதுடில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி A K S விஜயன், திண்டுக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் P - வேலுசாமி, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமேலாண்மை இயக்குனர் வி.ராஜாராமன். தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் அஷிஷ் சாட்டர்ஜி ஆகியோரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu