/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 8வது நாளாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு

தூத்துக்குடி, மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு 8வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 8வது நாளாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு
X

சாலைகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு.

வரலாறு காணாத பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், சாலைகளை ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு அவர்களும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதிக்கு அருகே, குரும்பல் என்னும் இடத்தில் உள்ள பாலம், வரலாறு காணாத பெய்த மழைநீர்வெள்ளதால், உடைந்து விட்டது. இப்பாலத்தை, இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன்பொதுப்ணித்துறை அமைச்சர் அவர்களும் சென்று ஆய்வு செய்தார்கள்.

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

வரலாறு காணாத பெய்த மழையினால், நாகர்கோவில்-5, விருதுநகர்-13, தென்காசி-13, தூத்துக்குடி-113 மற்றும் திருநெல்வேலியில்-44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கின்ற தரைப்பாலம் உடைந்து விட்ட காரணத்தினால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கீரிட் சாலை போடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1127 தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட்டு வருகிறோம். இதில், இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்டப்பாலமாக கட்ட ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்கள்.

தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவது என்பது இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நான்கு மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர் அவர்களிடம் தெரிவித்துள்ளேன் என்பதை அமைச்சர் தெரிவித்தார்.

மாஞ்சோலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன், சாலை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு பணிகளின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 25 Dec 2023 5:18 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!