அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று டிஸ்சார்ஜ்: உடல்நலம் விசாரித்த முதல்வர்

அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று டிஸ்சார்ஜ்: உடல்நலம் விசாரித்த முதல்வர்
X

அமைச்சர் அன்பில் மகேஷ்.

Minister Anbil Mahesh discharged today: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்வமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

இந்நிலையில் அரசு விழாவுக்காக கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது . இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகே உள்ள காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அன்பில் மகேஷ் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!