Vanathi Srinivasan - லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை; வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Vanathi Srinivasan -வானதி சீனிவாசன். (கோப்பு படம்)
Vanathi Srinivasan, allegation- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் 98 சதவீத மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக" கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணத்துக்கான டோக்கன் பெறவும், பணத்தை பெறவும் மக்கள் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
பணம் கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்க படாதபாடு பட்டு வருகின்றனர். ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டு துயரத்தில் இருக்கும் மக்களை மேலும் கஷ்டப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை நேற்று நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவி வழங்கினோம். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். வெள்ளம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் நிவாரண உதவி அறிவித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu