சிதறிய உடல்கள்... பதறிய உள்ளூர் மக்கள்: விபத்து நடந்தது எப்படி?
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே இன்று பகலில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை அருகே, 11 .47 -க்கு புறப்பட்ட எம்.ஐ. 17வி5 ரக ரஷ்ய தயாரிப்பான ஹெலிகாப்டர், 12:20 மணியளவில், குன்னூர் வனப்பகுதியில், தீப்பிழம்புடன் விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில், இதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் 7 பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் மூவர் மீட்கப்பட வேண்டும்.
குன்னூர் வெலிங்டன் பகுதியில் இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிபின் ராவத் பங்கேற்க இருந்த நிலையில் விபத்து நேரிட்டுள்ளது. தரையிறங்க வேண்டிய இடத்திற்கு 10 கி.மீ தொலைவுக்கு முன்பாக இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
குன்னூர் காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, கடும் பனிமூட்டம் இருந்ததாகவும், ஹெலிகாப்டர் தள்ளாடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறினர். அதன் பின்னர் பயங்கர சத்தத்துடன் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து வெடித்து சிதறியதாக, அவர்கள் மேலும் கூறினர். அதிக வீரியம் கொண்ட விமான பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட நிலையில், தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததாகவும், நேரில் பார்த்தவர்களை மேற்கொள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
வனப்பகுதி என்பதால், மீட்பு வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள் செல்வதில் சிக்கல் இருந்துள்ளது. விபத்து பகுதியில் கருகிய நிலையில் உடல்கள் சிதறிக்கிடந்ததாகவும் தீ பயங்கர ஜுவாலையுடன் எரிந்ததால், அருகில் நெருங்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். எனினும் உயிரை பொருட்படுத்தாமல், முதலில் உள்ளூர் மக்கள்தான் முதலில் தீயணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் பின்னரே மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu