மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி வாராந்திர ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி வாராந்திர ரயில் சேவை மேலும் நீட்டிப்பு
X
மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி வாராந்திர ரயில் சேவை மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பான அதே நேரம் பேருந்து கட்டணத்தை விட குறைவாக இருப்பதால் தற்போது நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணிப்பதை விரும்புகிறார்கள்.பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் நடவடிக்கையாக திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்.06030 திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும்.

01.10.2023 முதல் 26 .11.2023 வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

ரயில் எண்.06029 மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 02.10.2023 முதல் 27.11.2023 திங்கட்கிழமைகளில் 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

பெட்டிகள்: ஏசி 2- அடுக்கு-1. ஏசி 3-அடுக்கு-2. ஸ்லீப்பர் வகுப்பு-7. பொது இரண்டாம் வகுப்பு – 3 & லக்கேஜ்-கம்-பிரேக் வேன்-1 பெட்டிகள். இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழ கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோயம்புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!