தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழைக்கு வாய்ப்பு
X
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கோடை துவங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த வாரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் கொஞ்சம் வெப்பம் தணிந்து இருந்தது. ஆனால்,மீண்டும் வெயிலின் தாக்கம் தொடர ஆரம்பித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்