டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை- வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை- வானிலை மையம்
X
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்,அரியலுார், கடலுாரில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்,அரியலுார், கடலுாரில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மழையால் கோடை வெப்பம் கொஞ்சம் தணிந்துள்ளது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story