துபாயில் இளைஞர் மரணம் கண்டித்து உறவினர்கள் மயிலாடுதுறை அருகே மறியல்

துபாயில் இளைஞர் மரணம் கண்டித்து உறவினர்கள் மயிலாடுதுறை அருகே மறியல்
X

துபாயில் மரணம் அடைந்த பிரபாகரன்

துபாயில் இளைஞர் மரணம் அடைந்ததை கண்டித்து மயிலாடுதுறை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன்( வயது27). குடும்ப வறுமையைப் போக்க வெளிநாடு செல்ல நினைத்த பிரபாகரன் அதே பகுதியைச் சேர்ந்த பரணி என்பவரின் உறவினர் ராஜா என்பவர் துபாயில் வைத்து நடத்தி வரும் சென்னை கிரீம்ஸ் உதயா மாவு மில் என்ற நிறுவனத்திற்கு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியாற்றி வந்த நிலையில் கடந்த மே மாதம் வீட்டிற்கு தொலைபேசி மூலம் பேசிய பிரபாகரன் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தன்னை நிறுவனத்தினர் சாப்பாடு சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதே மாதம் 21ஆம் தேதி பிரபாகரன் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தொலைபேசி மூலம் பிரபாகரனை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபாகரனின் உறவினர்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் தூதரகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் பிரபாகரனை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது பிரபாகரன் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

பிரபாகரனின் உறவினர்கள் மயிலாடுதுறை அருகே சாலை மறியல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரனின் உறவினர்களும், கிராம மக்களும் பட்டவர்த்தி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மணல்மேடு போலீசார் விரைந்து வந்து பிரபாகரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!