மயிலாடுதுறை அருகே இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

மயிலாடுதுறை அருகே இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது
X

மயிலாடுதுறை அருகே திருவாலங்காடு அன்பழகன் மகன் சூரியா(23) என்ற இளைஞர் பக்கத்து ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி +1 படிக்க பள்ளிக்கூடத்திற்கு சென்றுவரும்போது ஆசை வார்த்தைக்கூறி பழகிவந்துள்ளார். கடந்த 7ம் தேதி அன்று சிறுமியை திருவாவடுதுறை பகுதியில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதிக்கு வலுக்காட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.

அதன்பேரில் சூரியாவை பிடித்து விசாரணை மேற்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்று அறிந்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூரியாவை போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்து காவலில் அடைத்தனர்.

Tags

Next Story
ai future project