மயிலாடுதுறையில் பள்ளி மாணவி பலாத்காரம் இளைஞர் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவி பலாத்காரம் இளைஞர் கைது
X
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.-

மயிலாடுதுறையில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி கடந்த 12ம் தனது தோழியை பஸ் ஏற்றி விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாணவியை கங்கனம்புத்தூரை சேர்ந்த மோகன்தாஸ் மகன் தினேஷ் (21) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாணையில் தெரியந்தது, இதனையடுத்து போலீசார் தினேஷை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!