மயிலாடுதுறை அருகே மாயமான கூலித்தொழிலாளி வயல் வெளியில் மர்ம சாவு

மயிலாடுதுறை அருகே மாயமான கூலித்தொழிலாளி வயல் வெளியில் மர்ம சாவு
X

மர்மமாக இறந்த கூலித்தொழிலாளி பாரதிமோகன்.

மயிலாடுதுறை அருகே மாயமான கூலித்தொழிலாளி வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன்(45) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டிற்கு விறகு வெட்டும் பணிக்காக சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி மாதவி அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிமோகனை தேடி வந்தனர்.

மாலை 4 மணி அளவில் மகாலிங்கத்திற்கு சொந்தமான வயல் வெளியில் பாரதி மோகன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரதிமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாரதி மோகனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!