மயிலாடுதுறை:மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

மயிலாடுதுறை:மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில்  பணி ஆணை
X

மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் மரணம் அடைந்த மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதல்நிலை ஆக்கமுகவராக பணிபுரிந்து வந்த கே.ரவீந்திரன் மரணம் அடைந்தார். இதனையொட்டி அவரது வாரிசுதாரரான ஆர்.ராகுலுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் புதன்கிழமை வழங்கினார்.

அப்போது செயற்பொறியாளர் வை.முத்துக்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.கார்த்திகேயன், கலியபெருமாள், வேல்முருகன், பிரகாஷ், உதவி நிர்வாக அலுவலர் ஆர்.சரவணகுமார், திமுக நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!